முகப்பு
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பெல் நிறுவனத்தில் திட்ட பொறியாளர் வேலை!

பொதுத்துறை நிறுவனமான பெங்களூருவில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள திட்ட பொறியாளர் பணி

Updated On : 4 ஜூன் 2025, 1:01 pm IST
BEL
பகிர்:

பொதுத்துறை நிறுவனமான பெங்களூருவில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள திட்ட பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி்: Project Engineer - I

காலியிடங்கள்: 28

Advertisement

Advertisement

சம்பளம்: ரூ. 40,000 - 55,000

தகுதி: பொறியியல் துறையில் இசிஇ, இஇஇ, மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு, தொலைத்தொடர்பியல், கணினி அறிவியல் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், தகவல் அறிவியல் போன்ற ஏதாவதொரு துறையில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி பொறியியல் பட்டம் முடித்திருப்பதுடன் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக்கடிதம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். எழுத்துத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், தேதி பற்றிய விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.472 மட்டும். கட்ட ணத்தை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

எழுத்துத் தேர்வுக்கு வரும் போது விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை கொண்டு வரவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Assistant Manager, (HR-Military Communi-cation), Bharat Electronics Ltd, Jalahalli Post, Bangalore - 560 013

மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.