ரசாயன உரத்தொழிற்சாலையில் பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரசாயன உரத்தொழிற்சாலையில் பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...
நேஷனல் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட், இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் மற்றும் ஃபெர்டிலைசர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு நிறுவனம் ராமகுண்டம் ஃபெர்டிலைசர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட்(ஆர்எஃப்சிஎல்).
தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள ராமகுண்டத்தில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில், ஒரு நாளைக்கு 2200 மெட்ரிக் டன் இயற்கை எரிவாயு அடிப்படையிலான அம்மோனியா மற்றும் ஒரு நாளைக்கு 3850 மெட்ரிக் டன் வேப்பம் எண்ணெய் பூசப்பட்ட யூரியா உற்பத்தி செய்கிறது. நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்நிறுவனத்தின் ராமகுண்டம் ஆலை மற்றும் நொய்டாவில் உள்ள கார்ப்பரேட் அலுவலகம் ஆகியவற்றில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
இது குறித்து பார்ப்போம்...
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். Rectt/01/2026
பணி: Engineer
பிரிவு: Chemical
காலியிடங்கள்: 12
பிரிவு: Mechanical
காலியிடங்கள்: 3
பிரிவு: Electrical
காலியிடங்கள்: 3
பிரிவு: Information Technology
காலியிடம் : 1
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.7.45 லட்சம்
தகுதி: வேதியியல், இயந்திரவியல், மின் பொறியியல், கணினித் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக் முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Manager
பிரிவு : Chemical
காலியிடங்கள்: 4
பிரிவு: Transportation
காலியிடம்: 1
பிரிவு: Finance and Ac-counts
காலியிடங்கள்: 2
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.9.94 லட்சம்
தகுதி : பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பாடப்பிரிவில் பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது சிஏ, சிஎம்ஏ-ல் தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40- க்குள் இருக்க வேண்டும்
பணி: Officer
பிரிவு: Materials
காலியிடங்கள்: 4
பிரிவு: Human Resource
காலியிடம் : 1
பிரிவு: Human Resource(Secretarial)
காலியிடம் : 1
சம்பளம் : ஆண்டுக்கு ரூ.7.45 லட்சம்
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் அல்லது ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் நிர்வாக உதவியாளர், செயலகப் பணிகள், அலுவலக மேலாண்மை பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது வணிக நிர்வாகம், தொழில் உறவுகள், பணியாளர் மேலாண்மை பிரிவில் எம்பிஏ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Additional CMO (Medical)
காலியிடம் : 1
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.14.91 லட்சம்
தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் தேர்ச்சியுடன் 14 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45- க்குள் இருக்க வேண்டும்
பணி: Accounts Officer
காலியிடங்கள்: 3
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.7.45 லட்சம்
தகுதி: சிஏ, சிஎம்ஏ, தொழில் நிர்வாகத்தில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்கவேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும் பணி 4-5 . 1000. SC / ST /EXS / PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் டயாது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rfcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.9.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
RFCL invites applications for the below mentioned positions for its Ramagundam Plant, Telangana and Corporate Office, Noida
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.