முகப்பு
வேலைவாய்ப்பு

கடற்படையில் இசைக் கலைஞர்களுக்கு வேலை!விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய கடற்படையின் இசைப்பிரிவில் அக்னிவீர் திட்டத்தின்கீழ் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு குறித்து...

Updated On : 22 ஏப்ரல், 2026 at 3:14 PM
பகிர்:
Updated On : 22 ஏப்ரல், 2026 at 2:57 PM

இந்திய கடற்படையின் இசைப்பிரிவில் அக்னிவீர் திட்டத்தின் 02/2026 (ஜூலை 26) பிரிவின் கீழ் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திருமணமாகாத இருபாலர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்களின் எண்ணிக்கை, பணியின் தேவைக்கேற்ப தீர்மானிக்கப்படும்.

திட்டத்தின் பெயர்: Agniveer (MR) (Musician)-02/2026

சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.30,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.33,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.36,500, நான்காம் ஆண்டு மாதம் ரூ.40,000

Advertisement

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கர்நாட்டிக், இந்துஸ்தானி போன்ற இந்திய இசையில் முறையான பயிற்சி பெற்று ஏதாவதொரு இசைக்கருவியை சிறப்பாக வாசிக்க தெரிந்திருக்க வேண்டும் அல்லது மேற்கத்திய இசை பிரிவில் முறையான இசைப் பயிற்சி பெற்று, ஏதாவதொரு இசைக்கருவியை நன்றாக வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 2:57 PM

வயதுவரம்பு: 1.7.2004 - க்கும் 31.12.2008- க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கடற்படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவத்தகுதி மற்றும் இசைத்திறன் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

உயரம்: ஆண்கள், பெண்கள் இருபாலரும் குறைந்த பட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி: ஆண்கள்1.6 கிலோ மீட்டர் தூரத்தை 62 நிமிடங்களில் ஓடி முடிப்பதுடன் 20 Squats, தலா 15 Push-ups மற்றும் Sits-up எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள் 1.6 கி.மீ.தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிப்பதுடன் 15 Squats, 10 Sitsups & Pushups எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு பாடங்களிலிருந்து கொள்குறி வகை கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் இதர தேர்வுகள் ஜூன்/ஜூலை மாதம் 2026-ல் நடை பெறும். இது பற்றிய முழு விபரம் அட்மிட் கார்டு மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் 4 ஆண்டுகள் இந்திய கடற்படையில் பணிபுரிய அனுமதிக்கப்படுவர். எழுத்துத் தேர்வுக்குரிய அட்மிட் கார்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தில் ஒட்டப்படும் கலர் புகைப் படமானது சமீபத்தில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விபரம் ஜூலை /ஆகஸ்ட் மாதம் இணையதளத்தில் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து கடற்படை பயிற்சி ஒடிசாவிலுள்ள ஐஎன்எஸ் சிகா கடற்படை தளத்தில் ஆரம்பமாகும். எழுத்துத்தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துத் தேர்விக்கான பாடத் திட்டத்தை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும். .

விண்ணப்பக் கட்டணம்: ரூ.60. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தங்களது கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.4.2026

Updated On : 22 ஏப்ரல், 2026 at 3:10 PM
summary

Online applications are invited from unmarried male and unmarried female candidates (who fulfil eligibility conditions as laid down by the Government of India) for enrolment as Agniveer {MR(Musician)} - 02/2026 (Jul 26) batch.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 3:10 PM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.