ஐஐஎம் திருச்சி-ல் 'நூலகத் தகவல் உதவியாளர்' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஐஐஎம் திருச்சி-ல் 'நூலகத் தகவல் உதவியாளர்' பணிக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம் 'இந்திய மேலாண்மை நிறுவனம்.' இந்நிறுவனத்தில் திருச்சி கிளையில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர் அல்லாத பணியான 'நூலகத் தகவல் உதவியாளர்' பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: EST/11/A-02/2026/001
பணி: Library Information Assistant
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Library & Information Science பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கனினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: திருச்சி ஐஐஎம் -ஆல் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு, கனினியில் பணிபுரியும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இரண்டு ஆண்டு பணி வழங்கப்படும். பின்னர் தேவைக்கேற்ப பணிக்காலம் நீட்டிக்கப்படும்.
எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது அசல் சான்றிதழ்கலை கொண்டு வரவும்.
வயது வரம்பு: 19.6.2026 தேதியின்படி 35-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்சி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு சலுகை வழங் கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.iimtrichy.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பயன்படுத்தி ஆன்லைன்முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.6.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Indian Institute of Management Tiruchirappalli invites online applications for the Library Information Assistant On Contract basis...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.