முகப்பு
வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... யூனியன் வங்கியில் உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

யூனியன் வங்கியில் உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

யூனியன் வங்கியில் உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி - கோப்புப்படம்
பகிர்:

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் வங்கி ஆஃப் இந்தியா-வில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சியின் பெயர்: Apprenticeship

மொத்த காலியிடங்கள்: 1865

Advertisement

உதவித்தொகை: மாதம் ரூ.15,000 - 20,000

வயது வரம்பு: 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சி, ஒபிசி பிரிவினர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது வரம்பு மற்றும் தகுதி ஆகியவை 1.4.2026 தேதியின்படி கணக்கிடப்படும். 1.4.2022 தேதிக்குப் பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள் மற்றும் தேர்வு மைய விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் பயன்பாட்டில் உள்ள தங்களது மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். நேர்முகத் தேர்வுக்குரிய அழைப்பு கடிதத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். ஆன்லைன் முறையில் நடைபெறும் எழுத்துத் தேர்வு குறித்த விவரங்களை ஆதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

நேர்முகத்தேர்வின்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு சென்னை, திருவள்ளூர், கோவை, மதுரை, நாமக்கல், திருச்சி, விருதுநகர், திருப்பூர், காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு, சேலம், சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, தென்காசி, கரூர், தேனி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற இடங்களில் நடைபெறும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: மே, ஜூன் - 2026

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஒபிசி பிரிவைச் சேர்ந்த ஆண்களுக்கு ரூ.800, பொது, ஒபிசி பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, திருநங்கைகளுக்கு ரூ.200 மட்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களது கல்வித்தகுதி பற்றிய விபரங்களை www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் www.unionbankofindia.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.5.2026

summary

Union Bank of India invites Online application from Indian citizen for engagement as apprentices under Apprentice Act 1961 as amended from time to time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.