முகப்பு

அவசரகால மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்தில் செவிலியா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அவசரகால மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்தில் செவிலியா் பணிக்கு விண்ணப்பிப்பது குறித்து....

30 வினாடிகள் முன்பு
அவசரகால மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்தில் செவிலியா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
செவிலியா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கோப்புப்படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்களில் செவிலியா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் கீழ் மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி மற்றும் மானாமதுரை ஆகிய அரசு மருத்துவமனைகளில் உள்ள விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்தில் (CEmONC) ஒப்பந்த அடிப்படையிலான செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்தப்பணி முற்றிலும் தற்காலிமானது, எக்காரணம் கொண்டும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது. பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.21,000 சம்பளமாக அளிக்கப்படும்.

Advertisement

Advertisement

இதற்கு விண்ணப்பிப்போர் செவிலியர் பட்டய படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம்(பி.எஸ்சி நர்சிங்) அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணியிடத்திற்கான அறிவிப்பு, விண்ணப்பப்படிவம் மற்றும் அரசு ஆணை ஆகியவற்றை சிவகங்கை மாவட்ட வலைதளம் http:/sivaganga.nic.in என்ற வலைத்தளத்தின் வேலைவாய்ப்பு பிரிவில் கொடுக்கப்பட்டுள்ல விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தகுந்த ஆவண நகல்களுடன் செயலாளா், மாவட்ட நலவாழ்வுச்சங்கம், மாவட்ட சுகாதார அலுவலா், மாவட்ட சுகாதார அலுவலகம், முதன்மைகல்வி அலுவலகம் மேல்தளம், மாவட்ட ஆட்சியா் வளாகம், சிவகங்கை- 630 562 -என்ற முகவரிக்கு வரும் 4.12.2026 அன்று மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது பதிவுத்தபால் மூலமாகவோ சமா்ப்பிக்கலாம்.

விண்ணப்பிப்போரின் விரிவான விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Applications invited for nursing positions at the emergency maternity and neonatal care unit

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.