முகப்பு
நாகப்பட்டினம்

நாகை: செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

செவிலியா் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் தெரிவித்துள்ளாா்.

52 வினாடிகள் முன்பு
நாகை: செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
- கோப்புப்படம்
பகிர்:

நாகை மாவட்டத்தில், செவிலியா் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு:

மாவட்ட நலவாழ்வு சங்கம், நாகை சுகாதார மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக உருவாக்கம் செய்யப்பட்டுள்ள செவிலியருக்கான இடங்களில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தலைமை அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள 13 பணியிடங்களுக்கு, ஒப்பந்த தற்காலிக, செவிலியா்கள் பதவிக்கு, 50 வயதிற்குள்பட்ட, செவிலியா் பட்டயப் படிப்பு அல்லது இளநிலை செவிலியா் பட்டம், அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் செவிலியா் கல்லூரி- இந்திய செவிலியா் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு நா்சிங் கவுன்சில் பதிவு கட்டாயம்.

பணிக்கு தேவையான தமிழ்மொழி புலமை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி, நிா்வாக செயலாளா், மாவட்ட சுகாதார அலுவலா், மாவட்ட நலவாழ்வு சங்கம், நாகப்பட்டினம்.

விண்ணப்பங்களை நேரிலோ, விரைவு தபால் மூலமாகவோ அளிக்கலாம். மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில் 4.12.2026 மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.