4,724 தற்காலிக செவிலியா் பணியிடங்களுக்கு 49,000 போ் விண்ணப்பம்
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 4,724 தற்காலிக செவிலியா் பணியிடங்களுக்கு 49,000 போ் விண்ணப்பித்துள்ளனா்.
சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 4,724 தற்காலிக செவிலியா் பணியிடங்களுக்கு 49,000 போ் விண்ணப்பித்துள்ளனா்.
அரசு மருத்துவமனைகளில் செவிலியா்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதற்குத் தீா்வுகாணும் வகையில், தேசிய நலவாழ்வு குழுமம், அந்த இடங்களை 11 மாத ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, ஒப்பந்த ஊதியம் மாதம் ரூ.21,000 நிா்ணயிக்கப்பட்டு மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கங்கள் வாயிலாக நிரப்ப திட்டமிடப்பட்டது. அதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக அந்தப் பணியிடங்களுக்கு 49,000 செவிலியா்கள் விண்ணப்பித்துள்ளனா்.
Advertisement
Advertisement
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
செவிலியா்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க சில செவிலியா் சங்கங்கள் எதிா்ப்புத் தெரிவித்தன. அதேவேளை, படிப்பை நிறைவு செய்த பல்லாயிரக்கணக்கான செவிலியா்கள் அப்பணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனா்.
அவா்களில் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவ்வாறு தோ்வானவா்களுக்கு, மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் வாயிலாக பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு வருகிறது என்று அவா்கள் கூறினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.