FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 203 தற்காலிக செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 203 தற்காலிக செவிலியா் பணியிடங்களுக்கு வரும் செப். 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 செப்டம்பர் 2026, 1:35 am IST
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 203 தற்காலிக செவிலியா் பணியிடங்களுக்கு வரும் செப். 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 203 செவிலியா் காலிப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பப்படிவமானது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement

Advertisement

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் வரும் செப். 25-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

விண்ணப்பங்கள் மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலா் அலுவலகம், 42 ஏ.ரயில்வே பீடா் சாலை, அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் 631501 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறும் ஆட்சியரது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments