முகப்பு
அரசுப் பணிகள்

பொன்னான வாய்ப்பு நழுவவிடாதீர்கள்... எஸ்பிஐ வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!

வங்கி பணிக்காக தயாராகி வரும் இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பாக வங்கிகளின் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) 1422 சிபிஓ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Updated On : 20 அக்டோபர் 2022, 1:43 pm IST
பகிர்:


வங்கி பணிக்காக தயாராகி வரும் இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பாக வங்கிகளின் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) 1422 சிபிஓ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் நவம்பர் 7 ஆம் தேதிக்கு முன்னராக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Circle Based Officer (CBO) 

பணியிடம்: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, தெலங்கானா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், சிக்கிம், மகாராஷ்டிரம், கோவா, அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 1422

சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,840

வயதுவரம்பு: 30.09.2022 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.  இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின் படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழங்களில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பொறியியல், பட்டய கணக்காளர், மருத்துவம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஸ்கிரீனிங் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.750 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://sbi.co.in/  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 7.11.2022

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.