FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருச்செந்தூர் கோயில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்

திருச்செந்தூர் கோயில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்

26 வினாடிகள் முன்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.
பகிர்:
அரோகரா என முழக்கமிட்டு முருகனை வழிபட்ட பக்தர்கள்.
பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என முழக்கமிட்டு முருகனை வழிபட்டனர்.
முதலில் யானை முகம் கொண்ட கஜமுகாசுரனை வதம் செய்த முருகர்.
கந்த சஷ்டி திருவிழாவின் இறுதி நாளான இன்று, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்த 'சூரசம்ஹாரம்' நடைபெறுகிறது.
இரண்டாவதாக சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை வதம் செய்த முருகர்.
கஜ முகத்துடனும், சிங்க முகத்துடனும் வந்த சூரனை வதம் செய்த பிறகு சுயரூபத்தில் வந்த சூரனை முருகன் தனது வேலால் வதம் செய்தார்
மனிதர்களின் மனதில் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மலங்களை அழித்து, இறைவனோடு கலக்கும் உயரிய தத்துவத்தையே இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
பக்தர்கள் எழுப்பிய வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை எட்டியது.
மாமரமாக மாறிய சூரனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுள் ஆட்கொண்ட முருகர்.
சூரசம்ஹாரம் முடிந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி சஷ்டி விரதத்தை நிறைவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.