'துணிவு' படத்தின் மாஸ் ஸ்டில்ஸ்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. படத்தில் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. கையில் துப்பாக்கியுடன் அஜித் இருக்கும் படங்கள் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது.
அஜித்தின் மிரட்டல் நடிப்பில் வெளியான மாஸ் போட்டோஸ்.
அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன், அமீர், பாவனி, சிபி, பிரேம், ஜிபி முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
துணிவு படத்தின் டிரெய்லர் பிரம்மாண்ட ரெஸ்பான்ஸ் பெற்றது.
டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளை கடந்து இருப்பதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.
படத்தின் சென்சார் பணிகள் முடிந்துள்ளது என தெரியவந்துள்ளது.
வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது வெளியான டிரெய்லரும் அதனை உறுதி செய்துள்ளது.
யு/ஏ சான்றிதழ் வழங்கப்ப்ட்டு இருப்பதோடு, படத்தின் ரன் டைம் 145 நிமிடம் 48 நொடிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தில் நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
படத்தின் 'சில்லா சில்லா', 'காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
மஞ்சு வாரியர் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அஜித்தின் 'துணிவு' படத்தின் புதிய படங்களை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மாஸாக டீ அருந்தும் நாயகன்.
இப்படத்தின் தமிழ்நாடு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
துணிவு படம் சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வாங்கியுள்ள நிலையில், 2 மணிநேரம் 23 நிமிடங்கள் படத்தின் கால அளவாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.