கில்லர் படம் பூஜையுடன் துவக்கம் - புகைப்படங்கள்
படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ப்ரீத்தி அஸ்ரானி ஜோடியாக நடித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா இயக்கும் முதல் படம் கில்லர்.
ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் காதல் கலந்திருக்கும் படம் இது.
படத்தின் பெரும்பகுதி இந்தியாவிலும் குறிப்பிடத்தக்க பகுதி மெக்சிகோவில் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பில், எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி அஸ்ரானி, கார்த்தி, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வாலி, குஷி ஆகிய ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, கடந்த 2015ம் ஆண்டு இசை படத்தை இயக்கி நடித்திருந்தார்.
10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனராவது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.