'பேங் பேங்' படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, வெளியீட்டிற்குத் தயாராகி வரும் இப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
கே.ஆர்.ஜி. குழுமம் சார்பில், கண்ணன் ரவி தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் இயக்கத்தில் பிரபுதேவா – வடிவேலு இணைந்து நடித்திருக்கும் படம் 'பேங் பேங்'.'பேங் பேங்' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'பேங் பேங்'.படத்தில் பிரபுதேவா, வடிவேலு, பப்லு பிருத்விராஜ், அனு கீர்த்தி, யாவீ, பீட்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.வேணு மற்றும் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆண்டனி மேற்கொள்ள, கலை இயக்கத்தை டான் பாலா கவனித்திருக்கிறார். ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை கே.ஆர்.ஜி. குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்திருக்கிறார்.படத்திற்கு தீபக் ரவி இணைத் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.தயாரிப்பாளர் கண்ணன் ரவி, படத்தொகுப்பாளர் ஆண்டனி, இயக்குநர் சாம் ரோட்ரிகஸ், நடிகை அனு கீர்த்தி, யாவீ, நடிகர் பீட்டர், ஆடை வடிவமைப்பாளர் ஸ்வரூபா ஆகியோர் கலந்து கொண்டனர்.