'பிக்பாஸ்' வாயிலாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தனி ரசிகர் பட்டாளத்தையும் தன் வசம் வைத்துள்ள நடிகை ஓவியா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அழுத்தமான மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படம் 'கிளிக்'.
படத்தில் அஸ்மிதா, அமுதவாணன், 'லொள்ளு சபா' மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜே.ஆர்.பி. இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகும் இப்படத்தை சுந்தர் மஹாஸ்ரீ இயக்குகிறார்.படத்தைத் தயாரிப்பதுடன், ஓவியாவுடன் இணைந்து ராஜாபிரபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.