தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தியை காவல் துறையினர் கைது செய்தனர்.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தில்லி நாடாளுமன்ற வளாகத்திலிருந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நோக்கி பேரணி சென்ற போது கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி.புதுதில்லியில் ராகுல், பிரியங்கா காந்தி கைதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.எஸ்ஐஆர் எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தியை காவல் துறையினர் கைது செய்தனர்.ராகுல் காந்தியை காவல் துறையினர் கைது செய்த காவல்துறையினர்.ராகுல் காந்தியை காவல் துறையினர் கைது செய்த காவல்துறையினர்.கைது செய்த போதும், தங்களது போராட்டம் தொடரும் என ராகுல் தெரிவிப்பு.தில்லியில் பேரணியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது.புதுதில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்திலிருந்து இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி நடைபெற்ற பேரணியின்போது, பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட பிறகு அகில இந்திய வானொலி வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வத்ரா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.