FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

72வது தேசிய திரைப்பட விருதுகள் விழா - புகைப்படங்கள்

72வது தேசிய திரைப்பட விருதுகள் விழா - புகைப்படங்கள்

37 வினாடிகள் முன்பு
இந்தியத் திரைப்படத்துறையில் சிறந்து விளங்கும் கலை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கௌரவிப்பதற்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருது வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகிறது.
பகிர்:
'கேப்டன் மில்லர்' படத்திற்காகவும், 'ராயன்' படத்திற்காகவும் நடிகர் தனுஷ் தேசிய விருதுகளை பெற்றார்.
சிறந்த பாடகிக்கான விருதினை, மலையாள பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 'அஜயன்டே ரெண்டாம் மோசனம்' படத்தில் இடம்பெற்ற, 'அங்கு வானம்' என்கிற பாடலுக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது.
மலையாளத் திரைப்படமான 'பிரமயுகம்' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான விருதை மம்மூட்டிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கெளரவிப்பு.
'ஆர்டிகிள் 370' திரைப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்ததற்காகஷ சிறந்த நடிகைக்கான விருதினை யாமி கௌதம் வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கெளரவிப்பு,
'ஆர்டிகிள் 370' திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை, இசையமைப்பாளர் சாஸ்வத் சச்தேவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கெளரவிப்பு.
'சந்து சாம்பியன்' திரைப்படத்தில் முர்லிகாந்த் பெட்கராக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதினை, கார்த்திக் ஆரியனுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கெளரவிப்பு.
சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதினை நடிகர் ரந்தீப் ஹூடாவுக்கு விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கெளரவிப்பு.
மூத்த நடிகர் ஆனந்த் நாகிற்கு தாதாசாகேப் பால்கே விருதினை வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கெளரவிப்பு,
'ஆர்டிகிள் 370' திரைப்படத்தைத் தயாரித்து அதற்கான திரைக்கதையை எழுதிய திரைப்படத் தயாரிப்பாளர் ஆதித்யா தார் அவர்களுக்கு, சிறந்த திரைப்படத்திற்கான விருதினை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
புகைப்படப் பத்திரிகையாளர் பாஸ்கர் சின்ஹா ​​கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக சஞ்சய் மிஷ்ராவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதினை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
72 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர்களான கார்த்திக் ஆர்யன், தனுஷ் உள்ளிட்டோர்.
72 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் மம்மூட்டி, சஞ்சய் மிஷ்ரா, கார்த்திக் ஆர்யன், தனுஷ், ரந்தீப் ஹூடா, யாமி கௌதம் உள்ளிட்டோர்.
72 வது தேசிய திரைப்பட விருது விழாவின் போது, ​​நடிகை யாமி கௌதமும் அவரது கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆதித்யா தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments