காதலி ஷாலினியை கரம்பிடித்தார் நடிகர் நிதின் - புகைப்படங்கள்
தனது நீண்ட நாள் காதலி ஷாலினியை கரம்பிடித்தார் நடிகர் நிதின்.
கடந்த 22 ஆம் தேதி அன்று நிதின் - ஷாலினியின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நிதின் தயாரிப்பாளர் சுதாகர் ரெட்டியின் மகன் ஆவார்.
இவர்களின் திருமணம் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற இருந்தது. இதற்காக துபையில் திருமணம் ஏற்பாடுகளை வெகு விமரிசையாகத் திட்டமிட்டிருந்தனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடைசியில் கைவிடப்பட்டன.
திருமணத்தில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் வந்து மணமக்களை வாழ்த்தினர்.
ஏராளமான படங்களில் நடித்து தெலுங்குத் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
நிதினுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
நடிகர் நிதின் - ஷாலினி ஜோடி.
இவர்களின் திருமணப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.