FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

நமீபியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா!

நமீபியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Updated On : 12 ஜூன் 2024, 6:42 pm IST
- படம் | ஐசிசி
பகிர்:

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்ற லீக் சுற்றின் 24-வது போட்டியில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவும், நமீபியாவும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து நமீபியா பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சில் சுருண்ட நமீபியா, 17 ஓவர்களில் 72 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் 36 ரன்கள் எடுத்தார்.

Advertisement

Advertisement

ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக ஆடம் ஸம்பா 4 விக்கெட்டுகளும், ஸ்டாய்னிஸ், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, நமீபியாவின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் பந்தை பவுண்ட்ரிக்கு நாலாபுறமும் பறக்க விட்டனர். 5.4 ஓவர்களில் 74 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

டேவிட் வார்னர் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 34 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 முன்னேறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments