3-வது ஒருநாள்: அயர்லாந்துக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நமீபியா!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய நமீபியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்துள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய நமீபியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்துள்ளது.
நமீபியா மற்றும் அயர்லாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (அக்டோபர் 27) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
ஜேன் ஃபிரைலிங்க் சதம் விளாசல்!
Advertisement
Advertisement
டாஸ் வென்று முதலில் விளையாடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேன் ஃபிரைலிங்க் சதம் விளாசி அசத்தினார். அவர் 122 பந்துகளில் 126 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் கெர்ஹார்டு எராஸ்மஸ் 51 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். மாலன் க்ரூகர் 42 ரன்கள், அலெக்ஸாண்டர் 36 ரன்கள் எடுத்தனர்.
அயர்லாந்து தரப்பில் ஆண்டி மெக்பிரின் மற்றும் கர்டிஸ் கேம்பர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜெய் மூந்த்ரா மற்றும் கேவின் ஹோ தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
317 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி விளையாடி வருகிறது.
In the third ODI against Ireland, Namibia batted first and scored 316 runs for the loss of 7 wickets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.