19.6.1976: பிஎச்.டி. பட்டம் பெற புது நிபந்தனை
பிஎச்.டி. பட்டம் பெற எம்.பில். பட்டம் முடிப்பதை கட்டாயமாக்கி புது நிபந்தனை அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...
புதுடில்லி, ஜூன். 18 - பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி செய்து "பிஎச். டி." (டாக்டர்) பட்டம் பெற வேண்டுமானால் அதற்கு முன்பாக "எம்.பில்" என்னும் பட்டத்தைப் பெற வேண்டும் என்று புது நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
"எம்.பில்" பட்டம் பெற்ற மாணவர்களே மேற்கொண்டு "பிஎச்.டி" பட்டத்திற்கு ஆராய்ச்சி செய்ய அனுமதிக்கப்படுவர் என்று பல்கலைக்கழக மானியக் கமிஷன் அறிவித்துள்ளது. இது தொடர்பான விதிமுறைகள் அடங்கிய ஒரு சுற்றறிக்கையை எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் அது அனுப்பியுள்ளது.
"எம்.பில்" பட்டம் பெறாமலே "பிஎச்.டி"க்கு மாணவர்களை அனுமதிக்க மற்றோர் நிபந்தனை விதிக்கப்படுகிறது. இதன்படி "எம்.பில்" பட்ட ஆராய்ச்சிப் படிப்புக்கு "சம அளவு ஆராய்ச்சி" செய்திருப்பதாக மாணவர்கள் தக்க சான்று காட்ட வேண்டும்.
Advertisement
Advertisement
"எம்.பில்" பட்டத்தில், 'ஏ', 'பி' என்று இரு கிரேடுகள் வழங்கப்படும்; 'ஏ' கிரேடு பெறுபவர்களே மேற்கொண்டு "பிஎச்.டி" பட்டத்திற்கு ஆராய்ச்சி செய்ய அனுமதிக்கப்படுவர். ...
லெபானில் அமெரிக்கரை வெளியேற்ற போர்ட் கட்டளை
வாஷிங்டன், ஜூன். 18 - லெபனானில் நிச்சயமற்ற நிலைமை நிலவுவதால் அங்கிருந்து அமெரிக்கர்களை வெளியேற்ற ஏற்பாடு செய்யுமாறு பேரூத்திலுள்ள யு.எஸ். தூதரகத்துக்கு ஜனாதிபதி போர்ட் உத்தரவிட்டுள்ளார்.
லெபனானிலிருந்து தரை மார்க்கமாக கோஷ்டியாக அமெரிக்கர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அயல்நாட்டு இலாகா அதிகாரி கூறினார்.
பேரூத்தில் நிச்சயமற்ற நிலைமை நீடிப்பதால், இச்சமயத்தில் வெளியேற விரும்பும் யு. எஸ். பிரஜைகளை தரை மார்க்கமாக வெளியேற்ற ஏற்பாடு செய்யுமாறு யு. எஸ். தூதரகத்துக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாக அவர் கூறினார்.
அத்யாவசியமற்ற தூதரக அதிகாரிகள் மட்டுமே வெளியேறுகிறார்கள். நாட்டில் சமாதானம் காணும் முயற்சியில் உதவ தூதரகம் திறந்திருக்கும் என்றார். லெபனானில் 1400 அமெரிக்கர்கள் இருக்கிறார்கள்.
அயல்நாட்டு மந்திரி கிஷ்ஸிங்கருடனும், மற்ற உயர் அதிகாரிகளுடனும் போர்ட் லெபனான் நிலைமையை பரிசீலித்தார்.
கொலை செய்யப்பட்ட யு.எஸ். தூதர் மெலாய், பொருளாதார ஆலோசகர் ராபர்ட் ஆகியோரின் சடலங்களை கொண்டுவர விசேஷ தூதர் டீன் பிரவுன் ராணுவ விமானத்தில் டமாஸ்கசுக்குச் செல்கிறார். ...