FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

10.10.1976: காலனி மனப்பான்மை நீடிக்கிறது: பிரதமர் எச்சரிக்கை

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

9 அக்டோபர் 2026, 4:04 pm IST
10.10.1976 - Dinamani
பகிர்:

லூயிதுறை (மோரிஸ் தீவு), அக். 9 - காலனி யாதிக்கம் மடிந்துவிட்டது அல்லது மடிந்து கொண்டிருக்கிறது என்றாலும், அதிலிருந்து தோன்றும் மனப்பான்மை இன்னும் மடியவில்லை என்று உலகை இன்று பிரதமர் இந்திரா காந்தி எச்சரித்தார்.

உயர்வு மனப்பான்மை, மற்றவர்களை சுரண்டும் எண்ணம், மற்றவர்கள் பாதிக்கப்பட்டாலும் தாங்கள் சடுதியில் லாபம் சம்பாதிக்கும் விருப்பம் ஆகியவை இன்னும் நிலவுகின்றன என்று அவர் சொன்னார்.

இங்கு மகாத்மா காந்தி நிலையத்தை பிரதமர் துவக்கிவைத்தார். இந்தியா உட்பட பல்வேறு பகுதிகளின் கலாசாரத்தை ஆராய இந்திய உதவியுடன் அந்த நிலையம் நிறுவப்பட்டுள்ளது. 1970 ஜூனில் முதல் தடவையாக மோரிஸ் தீவுக்கு விஜயம் செய்த போது அதற்கு பிரதமரே அடிக்கல் நாட்டினார்.

Advertisement

Advertisement

இந்தியா, மோரிஸ்தீவு இடையே முறிக்க முடியாத நட்புறவை இந்த நிலையம் காட்டுவதாக பிரதமர் வர்ணித்தார். அந்நியர் ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடந்த மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய மகாத்மா காந்தியின் அரிய பணி பற்றி தன் உரையின் பெரும் பகுதியில் பிரதமர் விவரித்தார்.

தங்கள் எதிர்காலத்தை உருவாக்கும் விருப்பம், அதற்காக உறுதியாக நிற்க தயாராக இருப்பது ஆகியவற்றிலிருந்து வலிமை வளர்வதை காந்திஜி காட்டினார் என்றார் அவர்.

சுதந்திரம் ஒரு போதும் நன்கொடையாக கிடைக்காது. அதை அரும்பாடுபட்டுப் பெற வேண்டும். வளர்ச்சிக்கான போராட்டம் இன்னும் கடுமையானது என்று இந்திரா கூறினார். ...

சீனப் பிரதமருக்கு மா-சே-துங் பதவி

பீகிங், அக், 9- சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மா- ஸே-துங் இடத்தில் பிரதமர் ஹூவா-குவா -பெங் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர் சீன அதிகாரி ஒருவர் இன்று கூறினார்.

கட்சித் தலைவர் நியமனம் குறித்து வெளிநாட்டினர் சீன அதிகாரியைக் கேட்டதாகவும், ஹூவா நியமிக்கப்பட்டிருப்பதாக அதிகாரி பதிலளித்ததாக மேற்கத்திய ராஜதந்திரி ஒருவர் ராய்ட்டர் நிருபரிடம் தெரிவித்தார்.

பீகிங் தெருக்களில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டிருந்தன. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி தலைவராக ஹுவா நியமிக்கப்பட்டிருப்பதாக சுவரொட்டிகள் கூறின. ஆனால் பல மணி நேரத்துக்குப் பின்னரும் சர்க்கார் அதிகாரி ஒருவரிடமிருந்து ஊர்ஜிதம் எதிர்பார்க்கப்பட்டது.

பிரும்மாண்டமான தொழிலாளர் ஸ்டேடியத்துக்குப் போகும் பிரதான தெருவில் சிவப்பு கருப்பு நிறத்தில் பின்வரும் வாசகங்கள் அடங்கிய ஒரு 'சுவரொட்டியை அயல் நாட்டினர் கண்டனர். ...

summary

10.10.1976: Colonial mindset persists: Prime Minister warns.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments