முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

24.6.1976: லாகூர் - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் விட முடிவு

லாகூர் - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் விட முடிவெடுக்கப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 24 ஜூன் 2026, 4:25 am IST
24.6.1976 - Dinamani
பகிர்:

புதுடில்லி, ஜூன். 23 - வரும் ஜூலை மத்தியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே ரயில் தொடர்பு ஏற்படும்போது அமிர்தசரஸுக்கும் லாகூருக்கும் இடையே ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் ஓடும்.

இரண்டு நாடுகளின் ரயில் தூதுக் குழுக்களும் பேச்சை ஆரம்பித்த முதல் நாளாகிய இன்றே இந்த உடன்பாட்டுக்கு வந்தன.

முதல் நாளே இவ்வித உடன்பாடு ஏற்பட்டது இந்தப் பேச்சு வார்த்தைகள் குறித்து நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. இரண்டு நாடுகளின் ரயில்வே இலாகாக்களின் கூட்டுக் காரியதரிசிகள் தலைமையில் உள்ள தூதுக் குழுக்கள் இன்று பேச்சைத் தொடங்கின. லாகூரிலும் அமிர்தசரஸிலும் நீண்ட தூர ரயில்களைப் பிடிக்கக் கூடிய முறையில் மேற்கண்ட உத்தேச லாகூர் - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் நேரம் அமைக்கப்படும்.

Advertisement

Advertisement

பேச்சுவார்த்தைகளை எந்தெந்த முறையில் எவ்வாறு நடத்துவது என்ற நடைமுறை குறித்து இரண்டு தூதுக் குழுக்களும் இன்று ஓர் உடன்பாட்டுக்கு வந்தன.

இன்றைய பேச்சின் தொடக்கத்தில் இந்திய தூதுக்குழுத் தலைவர் ஆர். சீனிவாசன் பேசிய போது, இரண்டு நாடுகளுக்கு மிடையே மீண்டும் ரயில் போக்குவரத்து ஏற்படுத்துவதில் தடங்கல் எதுவும் இராது என்று கூறினார். ஆனால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடைய ரயில்வே போக்குவரத்து நின்று 11 ஆண்டுகளாய் விட்டன. அதற்கிடையே போக்குவரத்து அமைப்பில் ஏற்பட்டுள்ள மாறுதல்களைக் கவனிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். எல்லைக்கு இப்பால் இந்தியாவின் பகுதியில் ரயில் தண்டவாளம் போடும் வேலைகள், பாலங்கள் கட்டும் வேலைகள் எல்லாம் முடிவடைந்து விட்டன என்று அவர் கூறினார்.

அதே போல, பாகிஸ்தான் பகுதியிலும் எல்லா ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டன என்று பாகிஸ்தான் தூதுக் குழுத் தலைவரும் கூறினார். தூதுக் குழுக்களிலிருந்து அமைக்கப்படவிருக்கும் சிறு குழுக்களில் ஒன்று சுங்க, குடியேற்ற விதிமுறைகளைப் பற்றி ஆராயலாம் என்று அவர் யோசனை கூறினார். ...

ஆண்மையற்றவனின் நான்கு திருமணங்கள்: விளைவு சிறைவாசம்

பம்பாய், ஜூன் 22 - 1966-ம் வருஷத்திலிருந்து 1975ம் வருஷம் வரையில், பத்து ஆண்டுகளில் கிஷோர் கோவர்தன்தாஸ் தேசாய் என்பவர் நான்கு முறை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார். புது மனைவி வந்தவுடன், பழைய மனைவியை அவர் விரட்டி விடுவார்.

அவருடைய தகப்பனார் இதற்கு உடந்தையாய் இருந்தார். இந்த இருவர் மீதும் தொடரப்பட்டிருந்த வழக்கில் இன்று பம்பாய் மாஜிஸ்டிரேட் தீர்ப்பு அளித்தார்.

கோவர்த்தன தாஸ் தேசாய்க்கு ஒரு வருஷ கடுங்காவலும் ரூ. 4000 அபராதமும் விதிக்கப்பட்டது. அவருடைய தகப்பனாருக்கு ஒன்பது மாத கடுங்காவலும், ரூ. 4000 அபராதமும் விதிக்கப்பட்டது.

தேசாயின் 4வது மனைவி சோடா என்பவள் போலீசில் தாக்கல் செய்த ஒரு புகாரின் மீது தான் இந்த விஷயம் வெளிவந்தது.

1975 ஏப்ரல் 42 யன்று கோடாவுக்கும் தேசாய்க்கும் பம்பாயில் திருமணம் நடந்தது. தகப்பனாரும், பிள்ளையும் சில விஷயங்களை பெண் வீட்டாருக்கு தெரிவிக்காமல் மறைத்து வைத்திருந்தார்கள். மணமகன் தேசாய் ஆண்மையற்றவர் என்பதையும், முந்திய மனைவியுடன் அவர் உடலுறவு வைத்துக்கொள்ள முடியவில்லை யென்பதையும் அவர்கள் ரகசியமாக வைத்திருந்தார்கள்.

1968 ஏப்ரல் 25 யன்று மஞ்சுளா என்ற ஒரு பெண்ணை தேசாய் மணந்து கொண்டார். அந்தத் திருமணம் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. பின்னர் 1968 அக்டோபர் 1 ஆம் தேதி யன்று பம்பாயைச் சேர்ந்த ஐயஸ்ரீ என்ற பெண்ணை மணந்துகொண்டார். அந்தப் பெண் கோர்ட்டில் வழக்கு போட்டு விவாகரத்து பெற்று விட்டாள்.

இந்த விவாகரத்துக்குப் பிறகு தேசாய், கோண்டால் என்ற ஊரைச் சேர்ந்த ரமா என்ற பெண்ணை 1971 ஏப்ரலில் மணந்து கொண்டார்.

தன்னுடைய எந்த மனைவியும் கருத்தரிக்கும்படி செய்ய தன்னால் முடியவில்லை என்பதை தேசாயே கோர்ட்டில் ஒப்புக் கொண்டிருக்கிறார். இளம் பெண்களுக்கு மன வேதனை அளிப்பதில் தகப்பனாருக்கும் பிள்ளைக்கும் ஏதோ விசேஷ மன நிறைவு ஏற்படுகிறதென்று மாஜிஸ்டிரேட் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

summary

24.6.1976: Decision taken to run the Lahore-Amritsar Express.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments