13.11.1976: தி.மு.க. மாஜி மந்திரி கண்ணப்பன் வீட்டில் போலீஸ் சோதனை
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
சென்னை நவ. 12- தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அறநிலையத்துறை மந்திரி எம். கண்ணப்பனின் வீட்டில் வியாழக்கிழமையன்று தமிழ்நாடு அரசு விசேஷப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஏழு மணி நேரம் சோதனை நடத்தி லைசென்ஸ் இல்லாத ரனையுடன் இருந்த ஒரு துப்பாக்கியையும், ஆட்சேபகரமான தஸ்தாவேஜிகளையும் கைப்பற்றினார்கள் என்று அந்தப் பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரி தெரிவித்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலூகாவில் ஆலம்பாளையம் என்ற கிராமத்தில் உள்ள கண்ணப்பனின் வீட்டில் இந்த சோதளை நடத்தது. சோதனை நடந்தபோது கண்ணப்பன் அங்கு இருந்தார்.
Advertisement
Advertisement
கண்ணப்பன் அமைச்சராக இருந்தபோது அவருக்கு முதுநிலை நேர்முக உதவியாளராக இருத்த எஸ். சங்கநாதன் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். ஹிந்து அறநிலையத் துறை நடத்தும் ''திருக்கோயில் பத்திரிகையின் உதவி ஆசிரியராக ஏ. ஜெகந்நாதன் இருக்கிறார். வியாழக்கிழமையன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள அவர்களது வீடுகளில் ஒரே சமயத்தில் சோதனைகள் நடத்தப்பட்டு, ஆட்சேபகரமான தஸ்தாவேஜிகள் கைப்பற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கண்ணப்பன், ரங்கநாதன், ஜெகந்தாதன் ஆகிய மூவர் மீதும் மற்றும் இதரர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய குற்றத் தண்டனை விதித் தொகுப்பின் (இ.பி.கோ) 120 பி பிரிவு ஆகியவற்றின் கீழ் ஒரு வழக்கை விசேஷ புலனாய்வுப் பிரிவு முதலில் புதன்கிழமையன்று பதிவு செய்து பிறகு வியாழக்கிழமை யன்று சோதனைகளை நடத்தியது. ...
70 வயதான டாக்டரை ஆட்குறைப்பு செய்ததற்கு நஷ்டஈடு
சென்னை, நவ. 12- ஒரு நூற்பு நெசவு மில்லின் மருத்துவமனையில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு டாக்டரை வேலையிலிருந்து நீக்கம் செய்ததற்காக, அவருக்கு ரூ. 5740 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற உத்தரவை ஆட்டேபித்து, அந்த மில்லின் நிர்வாகம் தாக்கல் செய்த ரிட் மனுவை ஹைகோர்ட் நீதிபதி எஸ். மோகன் தள்ளுபடி செய்து, ஆட் குறைப்புக்கு நியாயமில்லை என்ற தொழிலாளர் கோர்ட்டின் உத்திரவை ஊர்ஜிதம் செய்தார்.
வழக்கு விவரம் வருமாறு:-
புதுக்கோட்டை பொது மருத்துவமனையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு டாக்டர் சுப்ரமணியம், 1949 செப்டம்பர் 14-ந் தேதியிலிருந்து புதுக்கோட்டை காவேரி நகரில் உள்ள காவேரி ஸ்பின்னிங் வீவிங் மில் மருத்துவமனையில், டிஸ்பென்சரி வைத்திய அதிகாரியாக வேலை பார்த்து கொண்டிருந்தார். மில் டிஸ்பென்சரி மூடப்பட்டு விட்டதாகக் கூறி 1962-ம் வருடம் மார்ச் மாதத்தில் அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். தம்மை வேலையிலிருந்து நீக்குவதற்காக இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாக, டாக்டர் சுப்பிரமணியம் புகார் கூறினார். ...