FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

15.11.1976: கீழ்க் கோர்ட்டுகளில் தமிழில் தீர்ப்பு: திட்டத்தை சி. எஸ். துவக்கிவைத்தார்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

15.11.1976 - Dinamani
பகிர்:

சென்னை. நவ.14 - தமிழ்நாட்டின் கீழ்க் கோட்டுகளில் கிரிமினல் வழக்குகளில் தமிழ்மொழி தீர்ப்பு மொழியாக்கப்படும் திட்டத்தை மத்திய நிதி மந்திரி சி. சுப்பிரமணியம் இன்று துவக்கி வைத்தார். ராஜாஜி மண்டபத்தில் இன்று நடந்த விழாவில் இது தொடர்பாக இந்திய பீனல் கோடு, கிரீமினல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றின் தமிழ்மொழி பெயர்ப்புகளையும் வெளியிட்டு வைத்தார்.

இந்த விழா மாநில கவர்னர் சுகாதியா தலைமையில் நடந்தது.

Advertisement

Advertisement

மேற்படி திட்டத்தை துவக்கி வைத்து மந்திரி சுப்பிரமணியம் பேசுகையில் இந்தி மொழி குறித்த தங்கள் கருத்தைப் பற்றி மக்கள் திரும்ப சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

"பிறமொழிகளைப் பயில மறுப்பதனால் நாம் தனித்து நின்று அதனால் ஒதுக்கப்பட்டவர்களாகி விடுவோம்" என்று அவர் கூறினர்.

அவர் மேலும் பேசுகையில். "நாமும் நம்முடைய எதிர்காலத் தலைமுறையிளரும் ஒன்றுபட்ட இந்தியாவில் வாழ விரும்புகிறோம் இல்லையா" என்று கேட்டார். இன்றைய தினம் ஒருமைப்பாடு தேவை இல்லை என நினைப்பவர்கள் யாருமில்லை. கருத்து வேறுபாடு முன்பு சிலருக்கு இருந்திருக்க , இப்போது இருக்க முடியாது என்றார்.

"வேறு மொழிகளைப் பயில்வதனால் தமிழுக்கு ஆபத்து ஏற்பட முடியாது என்பதை நாம் உணர வேண்டும். தமிழை வளர்ப்பதையோ அதை மேலும் வளமுள்ளதாகச் செய்வதையோ யாரும் தடுக்க முடியாது'' என்றும் அவர் சொன்னார்.

"தமிழ் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தான் பிற மொழிகளால் அதற்கு ஆபத்து ஏற்படும் என்று கூறமுடியும். உண்மையிலே தமிழ் வளர வேண்டும் என்றால் அது தனித்திருப்பதால் வளரவே முடியாது. ஆங்கிலம் பிற மொழிகளிலிருந்து வேண்டியதை எடுத்துக் கொண்டு தன்னுடையதாக்கிக் கொண்டதால் தான் அகில உலக மொழியாக முடிந்தது. நோயாலியைப் போல தமிழைப் பிரித்து வைப்பதால் அது ஒருபோதும் அரியாசனம் ஏற முடியாது. தனித்தமிழ் வாதிகள்தான் தமிழ் ஆட்சி மொழியாவதற்கு தடையாக இருக்கிறார்கள்" என்று அவர் சொன்னார்.

மொழிக் கொள்கையை அரசு உருவாக்கிய வரலாற்றை விளக்கிய சி. சுப்ரமணியம் கௌஹாத்தி காங்கிரசில், இந்தி ஆட்சி மொழியாவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நேரு கொண்டு வந்தபோது தாம் அதை துணிவுடன் எதிர்த்ததாகச் சொன னார். இந்தி பேசாத மக்களின் நியாயமான வாதங்களை நேருவும் ஏற்றார் என்றார்.

"ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தேவையான காலம் வரை நீடிக்கும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தி பேசுகிறவர்கள் அதிகமாக இருப்பதால் இந்தி நிர்வாக மொழியாக ஏற்கப்பட்டது. இந்தி தேசிய மொழி என்று ஒரு தவறான கருத்து நிலவி வந்தது. நேருஜி எந்த தனி மொழியும் தேசிய மொழியாக முடியாது என்றும், எல்லா இந்திய மொழிகளும் தேசிய மொழிகளே என்றும் தெளிவுபடுத்தினார். இந்தி நிர்வாக மொழி ஆயிற்றே தவிர தேசிய மொழி ஆகவில்ல என்றும் சி. எஸ். சொன்றார்.

"எல்லா மொழியும் ஆட்சி மொழியாக முடியாது என்பதாலே மும்மொழித் திட்டம் உருவாக்கப் பட்டது" என்றார் அவர்.

"மொழியானது கூட்டியும்வைக்கும், விலக்கவும் செய்யும்" என்று சொன்ன அவர், நம்நாடு ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்கு மொழி குறுக்கே வரக்கூடாது என்றார். ...

summary

15.11.1976: Judgments in Tamil in lower courts: C. S. inaugurates the scheme

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.