FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

28.10.1976: அரசியல் சட்ட திருத்தம் - லோக சபையில் பிரதமர் இந்திரா காந்தி உரை

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

28.10.1976 - Dinamani
பகிர்:

புதுடில்லி, அக் 27 - அரசியல் சாசனத்தைத் திருத்துவதற்கு பார்லிமெண்டுக்கு முழு அதிகாரம் உண்டு என்றும், இதற்கு எந்தவிதத் தடைகளோ கட்டுப்பாடுகளோ கிடையாது என்றும் லோகசபையில் பிரதமர் இந்திரா காந்தி இன்று மீண்டும் கூறினார்.

அரசியல் சாசனத்தின் 'அடிப்படை அமைப்பு' என்னும் கருத்து எதனையும் தாங்கள் ஏற்கவில்லை என்றும், இந்தக் கருத்து நீதிபதிகளால் 'புதிதாக உருவாக்கப்பட்டதாகும்' என்றும் அவர் கூறினார்.

மசோதா மீது பொது விவாதம் இன்று லோகசபையில் பூர்த்தியடைந்தது. நாளைய தினம் சட்ட மந்திரி பதிலுக்குப் பின் ஷரத்து வாரி விவாதம் ஆரம்பமாகும்.

Advertisement

Advertisement

அரசியல் சாஸனத்தின் 44 வது திருத்த மசோதா மீது, பார்லிமெண்டில் இன்று நடந்த மூன்றாவது நாள் விவாதத்தில் குறுக்கிட்டு பிரதமர் இந்திரா உரை நிகழ்த்தினார். இந்த மசோதாவின் நோக்கங்கள் பற்றி அவர் விளக்கினார்

"நமது அரசியல் முறையில் உள்ள சில குறைகளைச் சரி செய்வதற்கான முதலாவது அத்தியாவசிய நடவடிக்கையே" இந்த மசோதா என்று பிரதமர் சொன்னார்.

"நமது மக்களை சுதந்திரப்படுத்தி, அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கான உயர் அதிகாரத்தை அவர்களுக்கு அளிக்கும்" அமைதிப் புரட்சி பற்றிய கருத்து நமது அரசியல் சாஸனத்தில் பொதித்து இருப்பதாகவும் இதனை இந்த மசோதா முன்னேத்திச் செல்லும் என்றும் பிரதமர் கூறினார்.

அரசியல் நிர்ணய சபைதான் அரசியல் சாசனத்தைத் திருத்த முடியும் என்னும் கருத்தை ஏற்க இயலாது என்று பிரதமர் சொன்னார். அரசியல் சாசனம் உரு வாக்கப்பட்ட போது கூட இது போன்ற கருத்துக்கள் கூறப்பட்டதாகவும், ஆனால் அவை நிராகரிக்கப்பட்டதாகவும் பிரதமர் சொன்னார்.

அரசியல் நிர்ணய சபை ஒரு குறிப்பிட்டோரின் வாக்குரிமையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றும், ஆனால், அரசியல் சாசனத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பார்லிமெண்டு, வயதுவந்தோர் வாக்குரிமையின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் என்றும் அப்போதே டாக்டர் அம்பேத்கார் விளக்கியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். எனவே அத்தகைய பார்லிமெண்டின் அதிகாரம் குறைந்த அளவு உடையதாக நிச்சயம் இருக்க முடியாது என்று பிரதமர் கூறினார். ...

பிரதமர் விளக்கம் - கிராமப்புறக் கடன்கள்: மாநில அரசு அதிகாரத்தில் டில்லி குறுக்கிடாது

புது டில்லி, அக். 27- சேரி வாழ்வோர் பிரச்னை ஸ்தல ஸ்தாபனங்களின் பிரச்னையாகும் என்று பிரதமர் இந்திரா காந்தி இன்று கூறினார்.

திட்ட இலாகா பார்லிமென்ட் மெம்பர்கள் ஆலோசனைக் குழுவில் அவர் பேசினார்.

கிராமப்புறங்களுக்கு வழங்கும் கடன்களை விதைகளாகவோ அல்லது உரமாகவோ வழங்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் ஒரு மெம்பர் ஆலோசனை கூறினார். அவ்வாறு செய்வதன் மூலம் இதற்காக ஒதுக்கும் பணம் வேறு காரணங்களுக்குப் போய்ச் சேராமல் தடுக்க முடியும் என்று அவர் சொன்னார். அதற்கு இந்திரா காந்தி பதிலளிக்கையில், "இது சாத்தியமல்ல. ஏனெனில் இவ்வாறு செய்வது மாநில அரசாங்கத்தின் அதிகாரங்களை எடுத்துக் கொள்வதாக முடியும்" என்று சொன்னார். இவ்விஷயத்தில் குடி தண்ணீருக்காக ஒதுக்கும் பணத்தின் உதாரணத்தையும் அவர் குறிப்பிட்டார். குடிதண்ணீருக்காக ஒதுக்கும் பணம் எல்லாச் சமயங்களிலுமே வேறு காரியங்களுக்காகத்தான் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினர். ...

summary

28.10.1976: Constitutional Amendment – ​​Speech by Prime Minister Indira Gandhi in the Lok Sabha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments