28.9.1976: ஸ்ரீலங்காவில் 10 ஆயிரம் பேர் மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்டது
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
கொழும்பு, செப். 87- ஸ்ரீலங்காவில் 1971ல் நடந்த இளைஞர் கலகத்தைத் தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் பேர் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் அக்டோபர் 10 தேதியிலிருந்து அகற்றப்படும்.
ஸ்ரீலங்கா பிரதமர் சிரிமாவின் காலஞ் சென்ற கணவரும், முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயகாவின் நினைவு தினமான நேற்று பிரதமர் இம்முடிவை எடுத்தார். பிரதமர் சிரிமாவோ நேற்று தனது கணவரின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இளைஞர் கலகத்தைச் சமாளிப்பதற்கு அரசு எடுத்த பாதுகாப்பு, சட்ட நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட பைல் மூடப்பட்டுவிடும். கலகத்தில் பங்கு கொண்டதாக கோர்ட்டில் ஒப்புக் கொண்டு தண்டிக்கப்பட்டு, நன்னடத்தையில் வெளியே விடப்பட்ட 3500 பேர் மீதான கண்காணிப்பும், அவர்கள் மீதான நடமாட்டக் கட்டுப்பாடுகளும் நேற்றைய முடிவின் மூலம் நீக்கப்படும்.
Advertisement
Advertisement
போலீசாரால் பிடிக்கப்பட்டு அல்லது போலீசாரிடம் சரண் அடைந்து, கோர்ட்டில் வழக்கு எதுவும் போடப்படாமல் விடுதலை செய்யப்பட்ட சுமார் 6500 பேர் மீது இருந்து வந்துள்ள கட்டுபாடுகளும் நீக்கப்படும். இவர்கள் போலீசார் முன்பு தினமும் ஆஜராக வேண்டும் என்றும், நகர சபை எல்லைக்கு அப்பால் போகக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் இருந்து வந்தன.
சர்க்காரியா கமிஷன் விசாரணை: வைத்தியலிங்கத்தின் ஆறரை மணி நேர சாட்சியம்
சென்னை, செப். 27- ஆப்பரேட்டர்கள் அளித்த மொத்தம் ரூ. 1,70,000 பணத்தை வாங்கி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் அளித்ததாக அவரது முன்னாள் அந்தரங்க செயலாளரும், தற்பொழுது தமிழக அரசாங்கத்தின் சமூக நல போர்டில் உதவிச் செயலாளராக இருப்பவருமான எம். வைத்தியலிங்கம் இன்று சர்க்காரியா கமிஷன் முன்பாக சாட்சியம் அளிக்கையில் கூறினார்.
போலீஸ் மற்றும் சி. பி. ஐ. மற்றும் யாரிடமிருந்தும் எந்த விதமான நிர்ப்பந்தமும் இல்லாமல் தான் சாட்சியமளிப்பதாக நீதிபதி சர்க்காரியாவின் கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்தார்.
"நான் யாருக்காகவும் பயப்பட்டதில்லை. உண்மையானவற்றைச் சொல்லத் தயங்கியதில்லை" என்று அவராகவே சர்க்காரியாவிடம் குறிப்பிட்டார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மற்றும் சில அமைச்சர்கள் மீது கூறப்பட்டுள்ள சில ஊழல் புகார்கள் பற்றி சர்க்காரியா கமிஷன் முன்பு இன்று 7-வது நாளாக விசாரணை நடந்தது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முன்னாள் அந்தரங்கக் காரியதரிசியான அந்த எம். வைத்தியலிங்கம் 6-வது சாட்சியமாக விசாரிக்கப்பட்டார். ...
... பூச்சி மருந்து டெண்டர்
1970-71 - ஏப்ரல் மாதத்தில் விவசாய இலாகா டைரக்டர் பூச்சி மருந்து தெளிக்க டெண்டர் கேட்டிருந்தார். இந்தியன் அக்ரிகல்சுரல் ஏவியேஷன். கம்பெனியார் டெண்டர் போட்டிருந்தனர்.
புஷ்பகா ஏவியேஷன் ஏக்கருக்கு அதே வேலைக்கு 8 ரூபாய் தான் கேட்டிருந்தது. சர்க்காரை கலந்து கொண்டு, இலாகா டைரக்டர் விவசாய ஏக்கர் 9 ரூபாய் கேட்ட டெண்டரை ஏற்றுக் கொண்டார்.
பயிர்களுக்கு பூச்சிமருந்து அளிக்க மத்ய சர்க்கார், ராஜ்ய சர்க்காருக்கு உதவும் ஒரு திட்டம் ஒன்றைத் தீட்டியது. எந்த அளவிற்கு ராஜ்ய சர்க்கார் மத்ய சர்க்காரிடமிருந்து அந்த திட்டத்தின் கீழ் உதவி பெற்று வந்தது என்பது பற்றி எனக்கு சரியான நினைவில்லை.
ராஜ்ய சர்க்காரின் விவசாயத் துறை டைரக்டர், இவ்விதம் விமான மூலம் பூச்சிமருந்து தெளிப்பை மேற்பார்வையிட வேண்டும் என்பது ஏற்பாடு. இது சம்பந்தப்பட்ட இதர சட்டதிட்ட நியதிகள் பற்றி எனக்கு இப்போது நினைவில்லை. விவசாய இலாகா டைரக்டர், மாவட்ட விவசாயத் துறை அதிகாரிகளின் உதவியுடன் பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட நிலங்களின் பரப்புக்களை நிர்ணயித்து, பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். ...
28.9.1976: Restrictions on 10,000 people in Sri Lanka were lifted.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.