"20% கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு பாதிப்பு'
இந்தியாவில் உள்ள 20 சதவீத கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகால நீரிழிவு பாதிப்பு உள்ளதாக, மெட்ராஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் டாக்டர் வி.மோகன் தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள 20 சதவீத கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகால நீரிழிவு பாதிப்பு உள்ளதாக, மெட்ராஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் டாக்டர் வி.மோகன் தெரிவித்தார்.
மெட்ராஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் கர்ப்பகால சர்க்கரை நோய் குறித்து சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர் வி.மோகன்
பேசியது: கர்ப்ப காலத்தின் இரண்டாம் பருவத்தில் நீரிழிவு இருப்பது தெரிய வரும். இந்தியாவில் 20 சதவீத கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஆரம்ப கட்டத்திலேயே இதைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என்றார்.
Advertisement
Advertisement
சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.