செய்திகள்

நிறையத் தண்ணி குடிங்க, தண்ணி குடிங்கன்னு சொல்லாதீங்க; அதுக்கும் ஒரு  லிமிட் இருக்காம் தெரிஞ்சிக்குங்க!

கார்த்திகா வாசுதேவன்

மனித உடலானது எந்த ஒரு பண்டத்தையுமே அளவுக்கதிகமாக ஏற்றுக் கொள்வதில்லை. அது உணவுப் பொருளானாலும் சரி, மருந்து மாத்திரைகளானாலும் சரி! ஆனால் நம்மில் சிலர் அடுத்தவருக்கு இலவசமாக வாரி வழங்கும் அறிவுரைகளில் ஒன்று ‘நிறையத் தண்ணீர் குடிங்க’ என்பது. இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால். தண்ணீர் அதிகமாகக் குடிப்பது தாகத்தை குறைப்பதற்காக மட்டுமல்ல, சருமத்தின் ஈரத்தன்மை குறையாமல் இருக்கவும், உடலினுள் நச்சுக்கள் தேங்காமல் இருக்கவும், உடலில் சூடு தங்காமல் இருக்கவும் தான். அப்படிக் குடிக்கும் தண்ணீருக்கும் ஒரு லிமிட் உண்டு. அதற்காக எல்லோரும் அதிகமாக நீர் அருந்தச் சொல்கிறார்களே என்று மணிக்கொரு தரம் 1 லிட்டர் தண்ணீர் அருந்தி விடத் தேவையில்லை. மனிதர்கள் அவரவர் வயதுக்கு தகுந்தாற் போல அவரவர் உடல் எடைக்குத் தக்க அளவில் தண்ணீர் அருந்த வேண்டும். பெரியவர்கள் எனில் 3 முதல் 3.5 லிட்டர் தண்ணீர் அருந்தலாம். பள்ளி செல்லும் சிறுவர்கள் எனில் 2 லிட்டர் தண்ணீரும் 5 வயதுக் குழந்தைகள் எனில் நாளொன்றுக்கு குறைந்த பட்சம் 1 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும்.

அப்படியல்லாது ஹெல்த் கான்சியஸ் என்ற பெயரில் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை 4 முதல் 5 லிட்டர் தண்ணீரை யாராவது அருந்தினால் அவர்களுக்கு என்ன ஆகும் என்கிறீர்களா? அவர்களுக்கு ஹைபோநட்ரீமியா என்றொரு நோய் குறைபாடு வரும். ஹைபோநட்ரீமியா என்றால் சோடியம் இழப்பு என்று பொருள். உடலில் அதிகப்படியான சோடியம் இழப்பு எதற்கெல்லாம் வழி வகுக்கும் தெரியுமா? செரிப்ரல் எடிமா, வலிப்பு, இறுதியில் இறப்புக்குரிய காரணங்களில் ஒன்றாகவும் இது மாற வாய்ப்பு உண்டாம். ஆகவே உடலில் உள்ள சோடியம் சத்தை காணாமல் போகச் செய்யும் அளவுக்கு நமது தண்ணீர் தாகம் இருந்து விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

ஆகவே அவரவர் உடல் எடைக்குத் தக்க நாளொன்றுக்கு எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பதை அறிந்து தண்ணீரை அருந்துங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT