மூலம் குணமாக வேண்டுமா? இதை முயற்சித்துப் பாருங்கள்!
வைட்டமின் B , C , கால்சியம் , பொட்டாசியம் , இரும்புச் சத்து , பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து
சத்துக்கள் : வைட்டமின் B, C, கால்சியம், பொட்டாசியம் , இரும்புச் சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து
தீர்வு : வெண்பூசணிக்காய் தோலுடன் (200 கிராம்), கோவைக்காய் (10) சின்ன வெங்காயம் (5), சீரகம் ஒரு ஸ்பூன், சோம்பு ஒரு ஸ்பூன் மணத்தக்காளி கீரை (1 கைப்பிடி), கொத்தமல்லி இலை (சிறிதளவு) கறிவேப்பிலை (சிறிதளவு) எடுத்துக் கொள்ளவும்.
முதலில் வெண் பூசணிக்காய் மற்றும் கோவைக்காய் இரண்டையும் நீராவியில் வேகவைத்து அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனோடு மற்ற பொருட்களையும் அனைத்தையும் சேர்த்து சூப்பாக தயார் செய்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை என குடித்து வரவும்.
Advertisement
Advertisement
மஞ்சள் தூள் இரண்டு சிட்டிகை எடுத்து 10 கிராம் வெண்ணெய்யில் கலந்து ஆசன வாயில் வைத்து அழுத்தி வந்தால் எத்தகைய உள்மூலமும் வெளி மூலமும் குணமாகும்.
வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.