அடிக்கடி மூட்டு வலி ஏற்படுகிறதா?
புடலங்காயில் விட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன.
சத்துக்கள் : புடலங்காயில் விட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன. மேலும் இக்காய் அதிக அளவு நார்சத்து, புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
தீர்வு : புடலங்காய் (100 கிராம் தோல், விதையுடன்), வாழைக்காய் (இளம் பிஞ்சு சிறியது (1), தேங்காய் (துறுவியது 50 கிராம்), இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக்கி காலை மற்றும் மாலை என இருவேளையும் உணவாக எடுத்துக் கொள்ளவும்.
பின்பு பசி எடுத்தால் வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளலாம். மதியம் வேளை உணவில் புடலங்காய், வாழைக்காய் இரண்டையும் தேவையான அளவு எடுத்து நீராவியில் வேக வைத்து அதனோடு தேங்காய் சேர்த்து பொறியலாக சாப்பிட்டு வரவும்.
Advertisement
Advertisement
வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.