FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி!

கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவிகள் விற்பனையில் உள்ளன.

11 செப்டம்பர் 2026, 4:28 pm IST
சுய-பரிசோதனைக் கருவி - பிரதி படம் - File
பகிர்:

கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவிகள் தற்போது விற்பனைக்கு வருகின்றன. மருத்துவமனை செல்லாமல் வீட்டிலிருந்தே பாதுகாப்பான முறையில் கருப்பை வாய் புற்றுநோயை இதன் மூலம் கண்டறியலாம்.

கருப்பை வாய் பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் மாதிரிகளை ஆய்வகத்தில் ஆய்வுக்கு உள்படுத்தி, கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பாபிலோமா வைரஸ் உள்ளிட்ட கிருமிகள் இருக்கின்றனவா என்பதை பரிசோதிப்பது கருப்பை வாய் புற்றுநோய் சோதனை. இதனை பெரும்பாலும் மருத்துவமனைக்குச் சென்றுதான் மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது.

ஆனால், தற்போது இதற்காக சுய பரிசோதனை கருவிகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

Advertisement

Advertisement

இவற்றால் என்ன பயன்?

  • ஹியூமன் பாபிலோமாவைரஸ் என்பதை ஆங்கிலத்தில் HPV-யைக் கண்டறியும் பரிசோதனை என்கிறார்கள்.

  • கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் வகையில் கருப்பை வாய் செல்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் வைரஸ் இது.

  • மருத்துவமனை சென்று 'ஸ்பெகுலம்' (speculum) கருவி மூலம் செய்யப்படும் பரிசோதனையை மேற்கொள்ள ​​வேண்டியதில்லை.

  • இதை வீட்டிலேயே பாதுகாப்பாக செய்துகொள்ளலாம்.

  • இது எளிதானதும் வலியற்றதும்கூட.

  • துல்லியமான பரிசோதனை முடிவுகளை அளிக்கும் என்றும், இதில் பிரச்னை இல்லை என்று தெரிந்துவிட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகே பரிசோதனை செய்வது போதுமானது என்கிறார்கள்.

பல வகைகளில் வருகின்றன

எம்-ஸ்டிரிப் வகை சுய பரிசோதனைக் கருவியில் ஒரு பஞ்சு போன்ற ஸ்டிக்கர் வருகிறது. அதனை பெண்கள் தங்களது மாதவிடாய் நேரத்தின்போது நாப்கினில் ஒட்டிக் கொள்ளலாம்.

பெரும்பாலும் முதல் நாளில் ஒட்டுவது ஏற்புடையது. பிறகு அதனை எடுத்து அதற்குரிய பெட்டியில் வைத்து ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும்.

மற்றொரு வகையிலானது, பெண்கள் பிறப்பு உறுப்பு பகுதியிலிருந்து மாதிரியைச் சேகரிக்க, 'கியூ-டிப்' (Q-tip) போன்ற சிறிய பஞ்சுத் தண்டு (swab) பயன்படுத்தப்படுகிறது. இது சுய பரிசோதனை கருவியுடனே வருகிறது.

இந்த கருவியைக் கொண்டு மாதிரியை சேகரித்து மீண்டும் சரியாக மூடி உரிய நேரத்துக்குள் ஆய்வகத்தில் சேர்த்து, பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இவற்றை இணையதளங்கள் வாயிலாக வாங்கும்போது, அதிலேயே ஆய்வக சோதனைக்காக கருவியை மீண்டும் பெற்றுக் கொள்ளும் வசதிகளும் அளிக்கப்படுகின்றன.

அந்தப் பெட்டகத்தின் மேல் பகுதியிலும், முழுமையான விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இ-வணிக அமைப்புகளில் இவை சில நூறுகள் முதல், 2 ஆயிரம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

summary

Self-testing kits for detecting cervical cancer are available for sale.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments