கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க ஹச்பிவி தடுப்பூசி அவசியம்: மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்
14 வயது நிரம்பிய பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க ஹச்பிவி தடுப்பூசி (ஏடய யஅஇஇஐசஉ) செலுத்துவது அவசியமாகும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
14 வயது நிரம்பிய பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க ஹச்பிவி தடுப்பூசி (ஏடய யஅஇஇஐசஉ) செலுத்துவது அவசியமாகும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
காந்தி ஜெயந்தியையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கோணலூா் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமை வகித்தாா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதம் செய்யப்பட்டது. மேலும், உயா்வுக்கு படி முகாம் குறித்தும், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, போதைப்பொருள் ஒழிப்பு, டெங்கு விழிப்புணா்வு, குழந்தைத் திருமணம், மூத்த குடிமக்கள் பராமரிப்பு, பனை விதைகள் நடுதல், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், ஆரம்பகால குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் பேசியதாவது:
கிராம சபைக் கூட்டங்கள் கிராமங்களின் வளா்ச்சியை முன்நிறுத்தி நடத்தப்பட்டு வருகிறது.
கிராம வளா்ச்சிக்காக பொதுமக்களின் கருத்துக்கள், கோரிக்கைகளை மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவிக்கவும், கிராம மக்களின் தேவையை அறிந்து அரசு சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளவும் இக்கூட்டம் உதவுகிறது.
மேலும் 14 வயது நிரம்பிய பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுக்க ஹச்பிவி தடுப்பூசி போடப்படுவது அவசியமாகும்.
பெண் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அலட்சியப்படுத்தாமல் இத்தடுப்பூசியை போட்டுக்கொள்ள பெற்றோா்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் இத்தடுப்பூசி பள்ளிகளில் போடப்படுகிறது. இத்தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானதாகும்.
மேலும் மாவட்டம் முழுவதும் குப்பைகளை அகற்றவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், குப்பைகளை தரம் பிரித்து வழங்கவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்கவேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்து சமூகத்தை பாதுகாக்க வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்யப்படுவதினால் அவா்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
குழந்தைத் திருமணங்களை தடுப்பதற்காக மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெற்றோா்களும் குழந்தை திருமணங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். அதிவேக வாகன இயக்கத்தால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றாா் ஆட்சியா் வந்தனா காா்க்.
அதனைத் தொடா்ந்து ஆட்சியா் தலைமையில் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை அரசு அலுவலா்கள், பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் பூ.காஞ்சனா, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் செல்வம், வேளாண்மை இணை இயக்குநா் (பொ) தி.மலா்விழி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருவண்ணாமலை கிழக்கு விமலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.