சைனஸ் தொல்லையைப் போக்க உதவும் அருமருந்து
சைனஸ் தொல்லையால் தினம் தினம் அவதிப்படுபவர்கள் இந்த சூரணத்தைப் பயன்படுத்திப் பலனடையுங்கள்.
சைனஸ் தொல்லையால் தினம் தினம் அவதிப்படுபவர்கள் இந்த சூரணத்தைப் பயன்படுத்திப் பலனடையுங்கள்.
தேவையான பொருள்கள்
கருஞ்சீரகம் - 50 கிராம்
சுக்கு - 50 கிராம்
Advertisement
Advertisement
செய்முறை
முதலில் கருஞ்சீரகத்தைச் சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். சுக்கை மேல்தோல் நீக்கி சுத்தப்படுத்திக் கொள்ளவும். பின்பு கருஞ்சீரகம் மற்றும் சுக்கு இரண்டையும் சேர்த்து அரைத்து பொடிசெய்து ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
பயன்கள்
இந்த சூரணம் சைனஸ் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாட்டினால் துன்பப்படுபவர்கள் இந்த வகைச் சூரணத்தைத் தயார்செய்து தினமும் அதிகாலை வேளையில் மற்றும் மாலை என இரண்டு வேளையும் தலா இரண்டு கிராம் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வரவும்.
முதல் 48 நாள்கள் தொடரவும். பின்பு தேவையறிந்து எடுத்துக் கொள்ளவும்.
நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
- கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell : 96557 58609 , 75503 24609
Covaibala15@gmail.com
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.