வீக் எண்ட் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரிங்க பாஸ்
அமைச்சரே... ஏன் அவனை அடிக்குறீங்க? மன்னா... நமது ராணுவ ரகசியங்களை வெளியே சொல்லி
'அமைச்சரே... ஏன் அவனை அடிக்குறீங்க?''
'மன்னா... நமது ராணுவ ரகசியங்களை வெளியே சொல்லிவிட்டான்'
'நமக்குத்தான் ராணுவமே கிடையாதே'
'அதைத்தான் சொல்லிவிட்டான்'
*வார்த்தை ஒன்றுதான்*
மருத்துவர் சொன்னால் மகிழ்ச்சி
Advertisement
Advertisement
ரேசன் கடைகாரர் சொன்னால் வருத்தம்
*" சர்க்கரை இல்லை"*
*வார்த்தை ஒன்றுதான்*
அம்மா சொன்னால் பாசம்
மனைவி சொன்னால் திகில்
*"உடம்பு எப்படி இருக்கு"*
*வார்த்தை ஒன்றுதான்*
கணவர் சொன்னால் மகிழ்ச்சி
மகன் சொன்னால் வருத்தம்
*" அரியர்ஸ் வந்து இருக்கிறது"*
*வார்த்தை ஒன்றுதான்*
மனைவி சொன்னால் கணவனுக்கு மகிழ்ச்சி
கணவன் சொன்னால் மனைவிக்கு வருத்தம்
*"ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா"*
**
'ஏன்டி மதியச் சாப்பாட்டுக்கு ஊறுகாயை வைத்து அனுப்பினாய்?''
'இன்னைக்கு மாசக் கடைசிங்கிறதை ஞாபகப்படுத்தத்தான்'
-டி.மோகனதாஸ், நாகர்கோவில்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.