மன்னிப்பு கேட்டார் நடிகர் தர்ஷன்
பெங்களூர், அக். 8: மனைவியை அடித்து சர்ச்சையில் சிக்கிய கன்னட நடிகர் தர்ஷன் அவரது ரசிகர்களிடமும், மக்களிடமும் சனிக்கிழமை மன்னிப்பு கோரினார். மனைவி விஜயலட்சுமியை அடித்த சம்பவம் தொடர்பாக கடந்த 28 நாள்கள்
பெங்களூர், அக். 8: மனைவியை அடித்து சர்ச்சையில் சிக்கிய கன்னட நடிகர் தர்ஷன் அவரது ரசிகர்களிடமும், மக்களிடமும் சனிக்கிழமை மன்னிப்பு கோரினார்.
மனைவி விஜயலட்சுமியை அடித்த சம்பவம் தொடர்பாக கடந்த 28 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்ஷன், உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அதன்பின், பெங்களூர், ராஜராஜேஸ்வரி நகரிலுள்ள தனது வீட்டின் முன்பு தன்னைக் காண வந்த ரசிகர்களிடம் அவர் பேசியது: எனது மனைவி விஜயலட்சுமியை அடித்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் கர்நாடக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.