FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

"மிக்' விபத்துகள்: தலைமை தளபதி விளக்கம்

ஹிண்டன் (காசியாபாத்), அக்.8: சமீபகாலங்களாக நிகழ்ந்து வரும் "மிக்-21' ரக போர் விமானங்களின் விபத்துகளுக்கு, இளம் விமானிகளின் அனுபவமின்மையே காரணம் என்று இந்திய விமானப் படைத் தலைமை தளபதி என்.ஏ.கே.பிரௌனி ச

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:19 am IST
பகிர்:

ஹிண்டன் (காசியாபாத்), அக்.8: சமீபகாலங்களாக நிகழ்ந்து வரும் "மிக்-21' ரக போர் விமானங்களின் விபத்துகளுக்கு, இளம் விமானிகளின் அனுபவமின்மையே காரணம் என்று இந்திய விமானப் படைத் தலைமை தளபதி என்.ஏ.கே.பிரௌனி சனிக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்த ஆண்டு நிகழ்ந்த "மிக்-21' ரக விமான விபத்துகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்து விபத்துகளுக்கும் இளம் விமானிகளின் அனுபவமின்மையே காரணமாகும். "மிக்-21' விமானங்களை இயக்குவது, தரையிறங்குவது ஆகியவற்றில் அவர்களின் அனுபவமின்மை வெளிப்படுகிறது.

இப்போது பயிற்சியில் உள்ள விமானிகள் குழு, "மிக்-21' விமானங்களை இயக்கும் திறன் பெறப்போகும் கடைசி குழுவாகும். இவர்கள் பெற்று வரும் பயிற்சி 2012-ம் ஆண்டு டிசம்பரில் முடிவடையும். உண்மையில் விமானிகள் நேரடியாக மூன்றாம் கட்ட பயிற்சிக்கு செல்வதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. ஆனால் இதைத்தவிர வேறு வழியில்லை என்று பிரெüனி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

1960-ம் ஆண்டு முதல் வாங்கப்பட்ட 976 மிக்-21 ரக விமானங்களில், பாதிக்கும் மேற்பட்டவை விபத்துகளில் அழிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments