FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் காலமானார்

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் இன்று மதியம் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 89.

9 ஜனவரி 2024, 1:03 pm
பகிர்:

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் இன்று மதியம் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 89.

உடல் நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் குர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அசோக் சிங்கால் இன்று மதியம் 2.24 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில உலக செயல் தலைவர் பிரவீன் தொகாடியா கூறினார்.

மூச்சுத் திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை கடந்த ஞாயிறன்று மோசமடைந்ததை அடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து அவரது உடல்நிலையை சீராக்கினர்.

Advertisement

Advertisement

தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தார். எனினும், இன்று மதியம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments