FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆந்திராவில் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: 18 பேர் பலி; 17 பேர் காயம்

ஆந்திர மாநிலத்தில் குண்டெப்பள்ளி என்ற இடத்தில் சாம்பல் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

ஆந்திர மாநிலத்தில் குண்டெப்பள்ளி என்ற இடத்தில் சாம்பல் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் விஜயவாடாவிலிருந்து விசாகபட்டிணத்திற்கு சாம்பல் ஏற்றிச் சென்ற லாரி குண்டெப்பள்ளி அருகே சாலையின் வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் டிரக்கில் வந்த 18 தொழிலாளர்கள் பலியாயினர். காயமடைந்த 17 பேர் ராஜமுந்தரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

எலுரு அருகே வேலை செய்து விட்டு தங்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்ப 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலையில் சென்ற லாரியை வழி நிறுத்தி ஏறியுள்ளனர் என்றும், இவர்கள் அனைவரும் 35 - 45 வயது மதிக்கத்தக்கவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments