ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதியை குடும்ப வன்முறை வழக்கில் கைது செய்ய ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதியை குடும்ப வன்முறை வழக்கில் கைது செய்ய ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.
ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வான சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி லீபிகா புகார் அளித்திருந்தார். அதில், தன்னை தன் கணவர் சோம்நாத் பாரதி அடித்து கொடுமைப்படுத்தி வருவதாகவும் ஒருமுறை கொல்ல முயன்றதாகவும் கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி சோம்நாத் பாரதிக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் தொடர்ந்து விசாரணையை தவிர்த்து வந்தார். இரண்டாவது முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாததால், அவர் கைது செய்யப்படலாம் என பரபரப்பாக பேசப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், முன்ஜாமின் கோரி சோம்நாத் பாரதி சார்பில் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கும்படி காவல்துறை சார்பில் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசாரணைக்கு ஒத்துழைக்காததால் சோம்நாத் பாரதியை கைது செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து சோம்நாத் பாரதிக்கு எதிராக பிணையில் வெளிவராத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.