FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

லூயிஸ் பெர்கர் வழக்கு: கோவா முன்னாள் அமைச்சரின் ஜாமீன் மனு தள்ளுபடி

அமெரிக்காவின் லூயிஸ் பெர்கர் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

அமெரிக்காவின் லூயிஸ் பெர்கர் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோவா முன்னாள் அமைச்சர் சர்ச்சில் அலெமோவின் ஜாமீன் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
 இதுதொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் அலெமோ தாக்கல் செய்த மனுவில், "இதே விவகாரம் தொடர்பாக கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் மீதும் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்; அவருக்கு கீழமை நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்துள்ளது. ஆதலால் எனக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு, மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கே.எல். வதானே முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அலெமோ ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments