FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வாக்குக்கு பணம் விவகாரம்: பிரதமரின் நிவாரண நிதியில் ரூ.1 கோடியை ஒப்படைக்க உத்தரவு

வாக்குக்கு பணம் வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில் கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி ரொக்கத்தை பிரதமரின் நிவாரண நிதித் திட்டத்தில்

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

வாக்குக்கு பணம் வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில் கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி ரொக்கத்தை பிரதமரின் நிவாரண நிதித் திட்டத்தில் ஒப்படைக்க வேண்டும் என தில்லி பெருநகர நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தின் போது, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் திரும்பப் பெற்றுக் கொண்டன.
 இதனைத் தொடர்ந்து, அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பானது, நாடாளுமன்றத்தில் 2008-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி நடைபெற்றது.
 அப்போது, அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க தங்களுக்கு பணம் வழங்கப்பட்டதாகக் கூறி பாஜக எம்.பி.க்கள் ஏராளமானோர் பணக்கட்டுகளை நாடாளுமன்ற வளாகத்தில் வீசினர். இதில், பாஜக எம்.பி. அசோக் அர்கலுக்கு ரூ.1 கோடி வழங்கியதாக சமாஜவாதி கட்சியின் முன்னாள் தலைவர் அமர் சிங்கின் உதவியாளர் சஞ்சீவ் சக்úஸனா மீது குற்றம்சாட்டப்பட்டது.
 ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவரை இந்த வழக்கில் இருந்து நீதிமன்றம் அண்மையில் விடுவித்து உத்தரவிட்டது.
 இந்நிலையில் இந்த வழக்கு, சிறப்பு நீதிபதி நரோத்தம் கௌசல் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
 அப்போது, இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடியை பிரதமரின் நிவாரண நிதித் திட்டத்தில் ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
 முன்னதாக, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சமாஜவாதி கட்சித் தலைவர் அமர்சிங், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி, பாஜக எம்.பி.க்கள் அசோக் அர்கல், ஃபகன் சிங், மகாவீர் சிங் பஹோரா, அக்கட்சி நிர்வாகி சோஹைல் ஹிந்துஸ்தானி ஆகியோரை விடுவித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments