கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு:குற்றச்சாட்டுகள் பதிவு குறித்து அக்-7.இல் உத்தரவு
மத்திய தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் செயலர் ஷியாமள் கோஷ் மற்றும் 3 தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீதான கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது குறித்து, அடுத்த மாதம் 7-ஆம் தேதி தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
மத்திய தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் செயலர் ஷியாமள் கோஷ் மற்றும் 3 தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீதான கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது குறித்து, அடுத்த மாதம் 7-ஆம் தேதி தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது குறித்து, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி சனிக்கிழமை (செப்டம்பர் 26) உத்தரவு பிறப்பிக்க இருந்த நிலையில், தற்போது ஒத்திவைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ""இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால், அக்டோபர் 7-ஆம் தேதி கூட உத்தேசமான தேதிதான்'' என்றார். இதுதவிர, ஷியாமள் கோஷின் ஜாமீன் மனு மீதும் அதே நாளில் நீதிபதி உத்தரவு பிறப்பிக்கவுள்ளார்.
Advertisement
Advertisement
முன்னதாக, 2002-ஆம் ஆண்டு, 2ஜி கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்ததாக, தொலைத் தொடர்புத் துறையின் அப்போதைய செயலர் ஷியாமள் கோஷ் மீதும், ஹட்சிசன் மேக்ஸ், ஸ்டெர்லிங் செல்லுலார், பார்தி செல்லுலார் ஆகிய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்தத் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் அலைக்கற்றைகளை ஷியாமள் கோஷ் ஒதுக்கீடு செய்ததன் மூலம், அரசுக்கு ரூ. 846.44 கோடி இழப்பை ஏற்படுத்திவிட்டதாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தது.
மேலும், மிகப்பெரிய அளவில் பணப் பரிவர்த்தனை நடைபெறும் இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டில், வேண்டுமென்றே தொலைத்தொடர்புத் துறையின் நிதிக் குழு உறுப்பினரின் கருத்தைக் கேட்காமல், தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக ஷியாமள் கோஷ் முடிவெடுத்தார் என்றும் சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்திருந்த கோஷ், கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு மூலம், தனியார் நிறுவனங்கள் மட்டுமன்றி, அரசின் எம்.டி.என்.எல்., பி.எஸ்.என்.எல். நிறுவனங்களும் பயனடைந்தன என்று கூறியிருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.