FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சாக்கடையில் விழுந்த சிறுமியை தேடும் பணி தீவிரம்

ஆந்திர பிரதேசத்தில் திறந்த சாக்கடை ஒன்றில் விழுந்து காணாமல் போன 6 வயது சிறுமியை தேடும் பணியில் 30 மீட்பு குழுவினர் இறங்கியுள்ளனர்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

ஆந்திர பிரதேசத்தில் திறந்த சாக்கடை ஒன்றில் விழுந்து காணாமல் போன 6 வயது சிறுமியை தேடும் பணியில் 30 மீட்பு குழுவினர் இறங்கியுள்ளனர்.

ஆந்திர பிரதேசத்தில் வீட்டு வசதி வாரிய காலனி மற்றும் எம்.வி.பி. காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கிய 3.5 கி.மீட்டர் நீளம் கொண்ட திறந்த சாக்கடையில் விழுந்த சிறுமியை தேடும் பணியில் போலீசார், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். சென்ற வியாழகிழமை டியூசன் முடித்து விட்டுக்கு திரும்பி கொண்டிருந்த அதிதி சிறுமி வீட்டு வசதி வாரிய காலனி பகுதியில் உள்ள சாக்கடையில் தவறி விழுந்து விட்டாள். பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் சாக்கடைக்குள் விழுந்த உடன் சிறுமி அடித்து செல்லப்பட்டுள்ளாள்.

சாக்கடை கடலுக்கு சென்று சேரும் வகையில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதை அடுத்து தேடுவதற்காக ஹெலிகாப்டர்களை அனுப்ப வேண்டும் என இந்திய கப்பற்படையிடம் மாவட்ட அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments