FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டிசம்பருக்குள் புதிய கல்விக் கொள்கைக்கான திட்ட வரைவு: ஸ்மிருதி இரானி தகவல்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான திட்ட வரைவானது டிசம்பர் மாதத்துக்குள் தயார் செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான திட்ட வரைவானது டிசம்பர் மாதத்துக்குள் தயார் செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னௌவில் "ஹிந்துஸ்தான் மீடியா' நிறுவனம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:

நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதலாக, கல்விக் கொள்கையானது தேசிய அளவில் மட்டுமே உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் நாட்டில் ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே பயனடைந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்கு கல்வியின் முழு சாரமும் சென்றடைவதில்லை.

இதனைக் கருத்தில்கொண்டே, தற்போது மாநிலக் கல்வி அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்து புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

இந்தக் கல்விக் கொள்கைக்கான செயல்திட்ட வரைவானது வரும் டிசம்பர் மாதத்துக்குள் தயாராகிவிடும். அதற்கேற்ப, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

நமது கல்வி நிலையங்களையும், பாடத்திட்டங்களையும் சீரமைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அயல்நாட்டு கல்வி நிலையங்களில் உள்ள தொழில்நுட்பங்களை நமது மாணவர்களும் கற்க வழிவகைச் செய்ய வேண்டும்.

சர்வதேச அளவில் போட்டியிடும் அளவுக்கு நம் நாட்டின் கல்வி நிலையங்களை மேம்படுத்த வேண்டுமெனில், அவற்றை சீரமைப்பது அவசியம் என்றார் அவர்.

மறுப்பு: இதனிடையே, தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தராக பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நியமிக்கப்படுவதாக எழுந்த தகவல்களை ஸ்மிருதி இரானி திட்டவட்டமாக மறுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மத்திய பல்கலைக்கழகச் சட்டத்தின்படி தேர்வுக் குழு வாயிலாகவே பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைத் தேர்வு செய்ய முடியும்' என்றார்.

"அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டேன்'

அமேதியில் நில அபகரிப்பு தொடர்பாக பேசியதற்காக நோட்டீஸ் அனுப்புவது போன்ற காங்கிரஸின் அச்சுறுத்தும் நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சப்போவதில்லை என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

அமேதியில் ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்காக விவசாயிகளின் நிலங்கள் முறைகேடாக அபகரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினேன். இதற்காக காங்கிரஸ் கட்சி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜனநாயக நாட்டில் எந்த ஒரு நபரையும் கேள்வி கேட்பதிலிருந்து தடுக்க முடியாது.

நான் ஒரு பெண் என்பதால், இதுபோன்ற சட்ட நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சி பின்வாங்கிவிடுவேன் என அவர்கள் நினைக்கின்றனர். காங்கிரஸின் அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன் என்றார் ஸ்மிருதி இரானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments