FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிகார்: முதல்கட்டத் தேர்தலில் 586 பேர் போட்டி

பிகார் சட்டப்பேரவை முதல்கட்டத் தேர்தலில் வேட்பு மனுவை திரும்பப் பெறுவது சனிக்கிழமையுடன் முடிவடைந்ததை அடுத்து, 49 இடங்களுக்கு 586 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

பிகார் சட்டப்பேரவை முதல்கட்டத் தேர்தலில் வேட்பு மனுவை திரும்பப் பெறுவது சனிக்கிழமையுடன் முடிவடைந்ததை அடுத்து, 49 இடங்களுக்கு 586 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

பிகாரின் 10 மாவட்டங்களில் அடுத்த மாதம் 12-ஆம் தேதி நடைபெற உள்ள முதல்கட்டத் தேர்தலில் போட்டியிட 605 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 19 பேர் சனிக்கிழமை வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

இதுதொடர்பாக பிகார் மாநில கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆர்.லஷ்மணன், செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

Advertisement

Advertisement

முதல்கட்டத் தேர்தலில் 586 பேர் போட்டியிட உள்ளனர். சமஸ்திபூர் மாவட்டத்தின் மோர்வா, மொய்தீன்நகர் ஆகிய தொகுதிகளில் அதிகபட்சமாக தலா 18 பேர் போட்டியிட உள்ளனர். இதனிடையே, பிகார் மாநில முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி உள்பட 210 பேர் இரண்டாம்கட்டத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை சனிக்கிழமை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டு சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்கீழ், கணக்கில் வராத ரூ.7 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது என்றார் லஷ்மணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments