மன்மோகன் சிங் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
83வது பிறந்த நாளை கொண்டாடும் மன்மோகன் சிங்குக்கு, 'டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்' என்று பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இந்தியாவின் 14வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் செப்டம்பர் 26ம் தேதி 1932ம் ஆண்டு பிரிக்கப்படாத இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த காஹ் கிராமத்தில் பிறந்தார். இவர் 2004ம் ஆண்டு மே மாதம் முதல் 2014 மே மாதம் வரை பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.