பழம்பெரும் நடிகர் மனோஜ் குமாருக்கு தாதா சாகேப் பால்கே விருது!
திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு
திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் (79) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுட்டுரைப் பதிவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்திய சினிமாவின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பத்மஸ்ரீ விருதையும் மனோஜ் குமார் ஏற்கெனவே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. "வோ கோன் தி', "உப்கார்', "நீல் கமல்' உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.