பாரதிய ஜனதாவில் இணைந்த பிரபல நடிகர்!
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி இன்று காலை பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்தியாபாரதிய ஜனதாவில் இணைந்த பிரபல நடிகர்!
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி இன்று காலை பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
புதுதில்லி: பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி இன்று காலை பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
புது தில்லியில் இன்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி மற்றும் பாஜக பொது செயலாளர் பூபிந்தர் யாதவ் முன்னிலையில் சுரேஷ் கோபி அக்கட்சியில் இணைந்தார்.
அவரது இணைப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நக்வி, ' சுரேஷ் கோபியின் வருகையால் கேரளாவில் பாஜக மேலும் வலுப்படுத்தப்படும்' என்று தெரிவித்தார்.
தேசிய விருது வென்றுள்ள சுரேஷ் கோபி இந்த ஆண்டு துவக்கத்தில் கேரளாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டார். அதன் பின்னர் நடந்த கேரள சட்டசபை தேர்தலிலும் அவர் அக்கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.