FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அருணாசலப் பிரதேசத்தில் சுரங்க பணிகளை சீனா மேற்கொள்ளவில்லை: மத்திய அரசு

அருணாசலப் பிரதேச மாநிலத்தில் சுரங்க வேலைகள் எதையும் சீனா மேற்கொள்ளவில்லை என்று மக்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அத்துடன்

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:16 am IST
பகிர்:

அருணாசலப் பிரதேச மாநிலத்தில் சுரங்க வேலைகள் எதையும் சீனா மேற்கொள்ளவில்லை என்று மக்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அத்துடன், அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒன்றிணைந்த பகுதி மற்றும் யாராலும் பிரிக்க முடியாத பகுதி என்று உறுதியாக கூறியுள்ளது.
அருணாசலப் பிரதேசத்தில் சீனா சுரங்க வேலைகளில் ஈடுபட்டிருப்பதை மத்திய அரசு அறிந்திருக்கவில்லையா? என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு வெளியுறவுத் துறை இணைஅமைச்சர் வி.கே. சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலப் பிரதேசத்தின் பகுதியில் சீனா எந்த வித பணியும் மேற்கொள்ளவில்லை ' என்று பதிலளிக்கப்பட்டிருந்தது.
மேலும் கிழக்கு பகுதியில் அருணாசலப் பிரதேசத்தில் இருக்கும் இந்தியாவுக்கு சொந்தமான 90,000 ச.கி.மீ. நிலப்பரப்பை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. 
ஆனால் உண்மையில் அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒன்றிணைந்த பகுதி மற்றும் யாராலும் பிரிக்க முடியாத பகுதி என்பதை பலமுறை சீனாவிடம் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது என்று சிங் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் அருணாசலப் பிரதேச பகுதியில் தங்கம், வெள்ளி மற்றும் பல மதிப்புமிக்க கனிமங்கள் இருப்பதாகவும், அந்த பகுதியில் சீனா சுரங்க வேலைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் ஊடகங்கள் தகவல் தெரிவித்திருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments